*குல தெய்வம்* யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
''முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த சான்றோர்கள் தமது *குல தெய்வம்*
யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் அல்லது குளத்தில் குளித்து விட்டு நீரினுள் முங்கி பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வெளியில் மண் கால் பட்டு சுத்தமில்லாமல் இருக்கும், நீருக்கடியிலிருக்கும் மிகவும் சுத்தமானது.
வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள்
குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (மரப்பலகை) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபூதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து, விளக்கேற்றி, ஊதுபத்தி, பூவிட்டு, கற்பூரம் காட்டி, அதையே தமது குல தெய்வமாக எண்ணி மனதார பூஜை செய்வார்கள்.
வீபூதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல
தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபூதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள்.
பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக
கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது; ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே
''இருக்கிறது" !
இவ்வாறு களிமண் உருவை படைத்து அதை பூஜிக்கவும்.
தினமும் நல்லெண்ணய் விளக்கேற்றவும்.
அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தனர்.
''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே" என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.
எப்போது அந்த மண் பிடியை *குல தெய்வத்தின்* உருவம் என்று கருதி பூஜிப்போமோ
அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய *குல தெய்வங்கள்* வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் அல்லது மரப் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் விளக்கேற்றி ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி 'குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயாக' என "மனதார" பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை.
ஆனால் நிச்சயமாக அவரவர் *பிராப்தம்* போல எப்போது அவர்களுக்கு தன்னைப்
பற்றிய விவரம் தெரிய காட்டும்.
தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம்
தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது.
பின்னர் தனக்கு என்ன கொண்டுவந்து பூஜிக்க வேண்டும் என்று தகவல் சொல்லும்.
எண்ணெய், பூ , பழம், துணி, பொங்கல் முதலியன!
தனது பெயர், ரூபம், இருக்கும் இடம், திசை, வம்சாவழி விபரங்கள் முதலியன நாம்
விரும்பும் விதத்திற்கேற்றவாறு பதில் தருவார்கள்!
எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ
அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதை விட்டு விடு விடவேண்டும் ''
குல தெய்வம் என்பது எத்தனையை ஜென்மங்களுக்கும் வழி வழியாக நம்முடன்
இருப்பது! நாம் அவர்களை வழிபடுதலிருந்து விலகக் கூடாது!
பில்லி, சூனியம் செய்வோர் முதலில் குல தெய்வத்தை வழி மறித்து விடுவர்!
நாம் தவறான வழியில் சென்றால் நம்மை மறித்து. நல் வழி காட்டும்!
அதையும் மீறி தவறான வழி சென்றால் "பட்டழிந்து வா" என விட்டுவிடும்!
பின் பல "தலைமுறை" கடந்து இது போல் *குலதெய்வத்தை* தேடி அலைய வேண்டும்!!!
மீண்டும் குலதெய்வ வழியில் செல்வோம்!!!!
நம் சக்திக்கேற்ப பூஜை செய்து வழிப பட வேண்டும்!
|
Sunday, 24 February 2019
*குல தெய்வம்* யார் எனத் தெரியாதவர்கள், என்ன செய்ய வேண்டும்?
Thursday, 21 February 2019
கடம்பாகுளம் ஸ்ரீ பூலூடையார் சாஸ்தா ஸ்தல வரலாறு!!! Kadambakulam Sri Pooludaiyar Saastha temple history!!!
கடம்பாகுளம் ஸ்ரீ பூலூடையார்
சாஸ்தா ஸ்தல வரலாறு!!!
Subscribe to:
Posts (Atom)